நடிகர்கள் சிலம்பரசன், மணிகண்டன் 
செய்திகள்

சிம்பு - வெற்றி மாறன் படத்தில் மணிகண்டன்?

சிம்பு படத்தில் மணிகண்டன் இணைய உள்ளதாகத் தகவல்....

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மணிகண்டன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிவரும் படத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் அறிவிப்பு விடியோவில் அவர் கதாபாத்திரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிகண்டன் இதற்கு முன், மத்தகம் என்கிற தொடரில் கேங்ஸ்டராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

actor manikandan in vadachennai based vetri maaran's new movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் வன்முறைக்கு தீா்வு? பாகிஸ்தான் அரசு - போராட்டக் குழு ஒப்பந்தம்!

சிஆா்பிஎஃப் முகாம் அருகே இரு வயது குழந்தை சடலமாக மீட்பு

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ட்ரோன்! காஷ்மீா் எல்லையில் தேடும் பணி தீவிரம்!

பூடான் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு!

விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது: கிருஷ்ணசாமி

SCROLL FOR NEXT