ரைட்டர் இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்?
பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரைட்டர் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
summary