நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார்.
இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மோகன்லால், “சினிமா என்பது பலரின் கூட்டுழைப்புதான். எதைப்போட்டால் அது நன்றாக இருக்கும் என யாருக்கும் தெரியாது. ஆனால், கதையும் திரைக்கதையும் முக்கியம். இலக்கியங்கள் மலையாள சினிமாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றன.
நிறைய சிறுகதைகள், நாவல்கள் மலையாளத்தில் சினிமாவாக மாற்றப்பட்டுள்ளன. பல திரைக்கதையாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புத் திறனால் மலையாள சினிமாவின் தரம் மேம்பட்டது. கேரளத்தில் இலக்கியம் வலுவாக இருப்பதால் சினிமாவும் அப்படி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தனுஷ் படத்தில் சுராஜ்!
actor mohanlal spokes about malayalam cinema and literature
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.