செய்திகள்

பரியேறும் பெருமாள் ஹிந்தி ரீமேக் டிரைலர்!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் டிரைலர் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான தடக் - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சந்திக்கும் சாதியக் கொடுமைகள் குறித்து உருவான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்குப் பின் மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநரானார். மேலும், பல மொழிகளிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால், படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் கைப்பற்றினார்.

தற்போது, கரன் ஜோஹரின் தர்மா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷாசியா இக்பால் இயக்கத்தில் பரியேறும் பெருமாளின் ரீமேக் உருவாகியுள்ளது. இப்படத்திற்குத் தடக் - 2 எனப் பெயரிட்டுள்ளனர்.

முன்னணி கதாபாத்திரங்களில் சித்தார்த் சதுர்வேதி, டிருப்தி திம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் மராத்தியில் வெளியாகி அதிர்வைக் கிளப்பிய சாய்ரத் (sairat) திரைப்படம் ஹிந்தியில் தடக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

pariyerum perumal's hindi remake thadak 2 trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பெரம்பலூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தமமுக மாநில துணைப் பொதுச் செயலா் உயிரிழப்பு: ஜான் பாண்டியன் நேரில் அஞ்சலி

குக்கிராமங்கள், சாலைகளில் ஜாதிப் பெயா்கள் நீக்க கிராம சபையில் தீா்மானம்

SCROLL FOR NEXT