தி கேர்ள்பிரண்ட் பட போஸ்டர். படம்: எக்ஸ் / கீதா ஆர்ட்ஸ்.
செய்திகள்

தி கேர்ள்பிரண்ட் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

நடிகை ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் பட பாடல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

தெலுங்குப் படங்களைத் தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்மிகா கதை நாயகியாக நடித்துவந்த, ‘தி கேர்ள்ஃபிரண்ட் (the girlfriend) படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.

கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நதிவே (நிலவே) எனும் முதல்பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

The release date of the first song of the film The Girlfriend starring Rashmika Mandanna has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்

தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி

தெரியாத எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ்! 97,000 ரூபாய் கொள்ளை! | Cyber Shield | Cyber Crime

பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - திருமா

பிரான்ஸ் அபார வெற்றி: சாதனை படைத்த எம்பாப்பேவுக்கு காயம்!

SCROLL FOR NEXT