நடிகர் விஷ்ணு விஷால் தனது முன்னாள் மனைவி உடனான விவாகரத்து குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், மனைவிக்கு இருந்த புற்றுநோய் குறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் 2009-இல் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமானவர்.
தனது கல்லூரி தோழி ரஜினி நடராஜை 2010-இல் திருமணம் செய்துகொண்டார். பின்னர், 2018இல் விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இது குறித்து விஷ்ணு விஷால் பேசியதாவது:
நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக என் காதலிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இருந்தும், நான் பார்த்துக்கொள்கிறென் என்ற வாக்குறுதிக்காகத் திருமணம் செய்து கொண்டேன்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை என ஆறு ஆண்டுகளாக அதற்கான சிகிச்சை எடுத்தோம். பிறகுதான், குழந்தைப் பெற்றுக்கொண்டோம்.
எனது தந்தைதான் அவளது உயிரை திருமணத்துக்கு முன்பு காப்பாற்றினார். அவரும் ஓய்வு பெற இருந்ததால் நான் குடும்பத்திற்காக உழைக்க வேண்டியிருந்தது.
பணத்திற்காகவும் சினிமாவில் வெற்றிக் கிடைக்கவும் நான் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தினேன். அதனால், எனது மனைவி நான் அவரை புறக்கணிப்பதாக நினைத்துக்கொண்டார்.
நான் சம்பாதிப்பதே உனக்கும் சேர்த்துதான் எனக் கூறினேன். அவர் கேட்கவில்லை. ராட்சசன் வெளியானப் பிறகு 5-ஆவது நாளில் நாங்கள் விவாகரத்து பெற ஒப்பிட்டோம்.
விவாகரத்து வேண்டாம் என நான் எவ்வளவோ கேட்டேன். அவள் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அனைவரும் ராட்சசன் வெற்றியைக் கொண்டாடும் நிலையில் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அது எப்போதுமே வெனோம் படத்தில் இருப்பது போல என்னுடன் இருக்கும் ஒன்றாக இருக்கிறது.
அந்த நேரத்தில் நடிகர் என்றாலே இப்படித்தான் இருப்பான் என பலவிதமான கமெண்ட்டுகளைப் பார்க்கும்போது மனம் வருந்தமடைந்தது.
நான் இப்போதும் என் முன்னாள் மனைவியுடன் பேசுகிறேன். அவருக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாறுகிறேன்.
அந்த நேரத்தில் அவசரப்பட்டுவிட்டதாக அவளும் என்னிடம் மன்னிப்பு கேட்டாள். கடவுள் கருணையால் அவள் தற்போது புற்றுநோய் இல்லாமல் இருக்கிறாள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.