நடிகர்கள் கவின், பிரியங்கா மோகன் 
செய்திகள்

கவினின் புதிய பட படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் கவின் நடிக்கும் 9-வது படத்தின் பூஜை...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கவின், பிரியங்கா மோகன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கான வெளியீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமாகியுள்ளார். தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்குகிறார்.

இந்த நிலையில், கவினின் 9-வது படத்தின் பூஜையும் இன்று நடைபெற்றுள்ளது. கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இப்படத்தை இயக்க, நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தில் இணைந்துள்ள பிற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor kavin's next movie shoot start with his female lead priyanga mohan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றே உருவாகும் மோந்தா புயல்?

ம.பி.யில் நீதிபதி வீட்டைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

மலேசியாவில் உற்சாக வரவேற்பு! நடனக்குழுவுடன் சேர்ந்து ஆடிய Trump!

நெல் கொள்முதல் விவகாரம்: இபிஎஸ் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

பருவமழை தீவிரம்: அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!

SCROLL FOR NEXT