இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்துடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே - 64 ஆக உருவாகும் இந்தப் படத்தின் இயக்குநர்களாக கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித்துடன் மீண்டும் இணைகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு ஆதிக், “ஆம். நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. குட் பேட் அக்லி படத்தைவிட வித்தியாசமான படமாக இது இருக்கும். படக்குழு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் - ஆதிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.