நடிகர் அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். அதனால், படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் இன்று மறுவெளியீடானது.
இந்தப் படத்தினை, ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் கண்டுகளித்தார்.
இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:
பிப்ரவரியில் இருந்து படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன. படக்குழுவினர் விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும்.
குட் கேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்கானது. இந்தப் படம் குழந்தைகள், குடும்பமத்தினர் என அனைத்து ரசிகர்களுமானதாக இருக்கும். விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்.
சமீபத்தில் அஜித் கேம்பா விளம்பரத்தில் நடித்ததால் அவரது ரசிகர்களே அவரை விமர்சித்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.