ஓடிடியில் வெளியானது டிஎன்ஏ!
டிஎன்ஏ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
டிஎன்ஏ திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூலை 19) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டிஎன்ஏ.
குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எமோஷனல் த்ரில்லராக உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்தது.
Advertisement
Advertisement
அதர்வா மற்றும் நிமிஷாவின் அழுத்தமான நடிப்பும் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக நடித்து இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீடானது பாட்ஷா திரைப்படம்..! இயக்குநர் கூறியதென்ன?
The movie DNA was released on the OTT platform today (July 19) and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.