தலைவன் தலைவி, மாரீசன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
தலைவன் தலைவி, மாரீசன் வசூல் குறித்து...
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி, வடிவேலுவின் மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால், முதல் நாளில் ரூ. 12 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே, விஜய் சேதுபதியின் அதிகபட்ச முதல் நாள் வசூலாகும்.
Advertisement
Advertisement
அதேபோல், நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 2.5 கோடி வரை வசூலித்திருக்கிறதாம்.
இதையும் படிக்க: நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
thalaivan thalaivi and maareesan movie first day collection
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.