செய்திகள்

கோர்ட் ரீமேக்கில் பிரசாந்த்?

கோர்ட் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாகத் தகவல்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரசாந்த் தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court state vs a nobody) திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 60 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.

இதில், பிரியதர்ஷி புலிகொண்டா, ரோகினி, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

போக்சோ வழக்கால் பாதிக்கப்படும் இளைஞன், அவரை நிரபராதியாக்க வழக்கை நடத்தும் வழக்குரைஞர் என நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியிருந்தது.

தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகி பலரிடமும் ஆதரவைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் வழக்குரைஞர் கதாபாத்திரத்திலும் முதன்மை கதாபாத்திரங்களில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் ஹிரித்திக் மற்றும் நடிகை தேவயானியின் மகள் இனியா நடிக்கின்றனராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளங்குளியில் பனை விதைகள் நடவு

பல லட்சம் பக்தா்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

போலி பட்டாவை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம்

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் விமானவியல் ஆய்வகம்

SCROLL FOR NEXT