ருக்மணி வசந்த் 
செய்திகள்

விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!

விக்ரம் படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த்...

தினமணி செய்திச் சேவை

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்தின் எழுத்துப் பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.

இந்த நிலையில், விக்ரம் இயக்குநர் பிரேம் குமார் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேல்ஸ் இண்டர்னேஷல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

96, மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து 96 - 2 படத்தை இயக்க பிரேம் குமார் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்படம் தள்ளிப்போக, திரில்லர் கதையொன்றை எழுதினார். விக்ரம் இக்கதையில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ருக்மணி, சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

actor rukmini vasanth do female lead in vikram movie directed by prem kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

மாங்குழியில் இலவச மருத்துவ முகாம்

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

வர்த்தக ஒப்பந்தம்! இந்தியா - அமெரிக்க அமைச்சர்களின் முரணான பேச்சால் குழப்பம்!

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங் காங்!

SCROLL FOR NEXT