செய்திகள்

குபேரா விழாவிற்கு ஜோடியாக வந்த தனுஷ் - ஐஸ்வர்யா! இணைந்து வாழ முடிவு?

குபேரா இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்....

DIN

குபேரா இசைவெளியீட்டு விழாவில் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தற்போது, ஹிந்தியில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக, கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். இதனால், அடுத்த சில ஆண்டுகளுக்கு தனுஷ் பிசியாகவே இருப்பார்.

நேற்று (மே. 31) தனுஷின் மூத்த மகன் யாத்ரா தன் உயர்கல்வியை நிறைவு செய்திருந்தார். இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தனுஷ் தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து கலந்துகொண்டு மகனை வாழ்த்தினார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் துவங்கிய குபேரா இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து கலந்துகொண்டு அருகருகே அமர்ந்துள்ளனர்.

இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மீண்டும் தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ வேண்டும் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

“அதிமுக ஏன் தலையிடவில்லை?” தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தொல். திருமாவளவன் விமர்சனம்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT