செய்திகள்

ஆண்கள் நடிகைகளைச் சுலபமாகத் தொடுகின்றனர்: நித்யா மெனன்

நடிகைகளிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து நி

DIN

நடிகை நித்யா மெனன் நடிகைகளிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டித்துள்ளார்.

நடிகை நித்யா மெனன் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.‘குமாரி ஸ்ரீமதி’, 'மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.

தற்போது, நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நித்யா மெனன், “பெரும்பாலான ஆண்கள், சாதாரண பெண்களிடம் நடந்துகொள்வதைப்போல் நடிகைகளிடம் நடப்பதில்லை. நடிகைகள் பொதுவெளிக்கு வந்தால் அவர்களைத் தொடுவதும், செல்ஃபி எடுக்கக் கட்டாயப்படுத்தும் என சுலபமாக மேலே கையை வைக்க முடிகிறது. இதே வேலையை சாதாரண பெண்ணிடம் செய்வார்களா? நடிகைகள் என்ன பொம்மைகளா?” எனக் கண்டித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர் விநியோகித்த ராணுவம்!

ஜெருசலேமில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி! பிரதமர் மோடி கடும் கண்டனம்!

நெளிவு சுழிவு... அனன்யா!

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! - டிரம்ப்

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்! இந்தியர்களுக்கு பாதிப்பா?

SCROLL FOR NEXT