செய்திகள்

மனுசி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு?

வெற்றி மாறன் - ஆண்ட்ரியா கூட்டணியில் உருவான படத்திற்கு புதிய சிக்கல்...

DIN

வெற்றி மாறன் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியா நடித்த மனுசி திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாம்.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த அதிகாரத்திற்கு எதிரான அரசியல் திரைப்படமான மனுசி படத்தை வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தின் டீசர் காட்சிகளிலேயே ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் பேசுபொருளானது.

இந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பெற இப்படத்தை தணிக்கை வாரியத்திடம் சமர்பித்து நீண்ட நாள்கள் ஆகியும் படத்திற்கு சான்றிதழ் வழங்க வாரியத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனராம்.

காரணம், படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் இடதுசாரிய அரசியல் வசனங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதுபோல அமைந்திருப்பதால் படம் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதற்காகத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நிலைமை நீடித்தால் இயக்குநர் வெற்றி மாறன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தணிக்கை வாரியம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

SCROLL FOR NEXT