செய்திகள்

ராமின் பறந்து போ டீசர் தேதி!

பறந்து போ டீசர் தேதி....

DIN

இயக்குநர் ராம் இயக்கிய பறந்து போ படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் ’பறந்து போ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகை அஞ்சலி, கும்பளாங்கி நைட்ஸ் திரைப்பட நடிகை கிரேஸ் ஆண்டனி, நடிகர் அஜு வர்கீஸ், பாடகர் விஜய் ஜேசுதாஸ் மற்றும் மாஸ்டர் மிதூல் ரயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படம், வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பறந்து போ படத்தின் டீசர் நாளை (ஜூன் 4) வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

மூவர்ண சேலையில்... ஸ்ரவந்தி சொக்கராபு!

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

SCROLL FOR NEXT