முகப்பு
செய்திகள்

ஜன நாயகன் படப்பிடிப்பை முடித்த விஜய்?

ஜன நாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்...

Updated On : 3 ஜூன் 2025, 11:39 am IST
பகிர்:

நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாம்.

அண்மையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன். 22 ஆம் தேதி ஜன நாயகன் படத்தின் டீசரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளனராம்.

இந்த நிலையில், நேற்றுடன் (ஜூன். 2) விஜய் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே அவரின் கடைசி படமென்பதால் ரசிகர்களுக்கு இத்தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.