தக் லைஃப் போஸ்டர்.   படம்: எக்ஸ் / ஆர்கேஎஃப்ஐ
செய்திகள்

எதிர்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது தக் லைஃப்!

தக் லைஃப் திரைப்படம் வெளியானது பற்றி...

DIN

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கன்னட மொழிப் பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடித்துள்ளதால் தக் லைஃப் படத்தின் அறிவிப்பு முதலே அதிக எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தில் டிரைலர் மற்றும் பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில், உலகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு திரையரங்குகளில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இன்று ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட்டுக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதால், இன்று நள்ளிரவு 2 மணிக்குள் 5 காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும்.

கர்நாடகத்தில் வெளியாகவில்லை

இசை வெளியீட்டின் போது, தமிழில் இருந்து கன்னடம் உருவானதாக நடிகர் கமல் பேசியது சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் கமலுக்கும் தக் லைஃப் வெளியீட்டுக்கும் கர்நாடகத்தில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மன்னிப்பு கேட்க மறுத்த கமல், அம்மாநிலத்தில் மட்டும் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் உள்ள கமலின் ரசிகர்கள் ஓசூரில் தக் லைஃப் படத்தை காண குவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT