சின்மயி 
செய்திகள்

மன்னிப்புக் கேட்டால் தடை நீக்கம்... மறுத்த சின்மயி!

சின்மயி மீதான தடை குறித்து...

DIN

பாடகி சின்மயி தன் மீதான தடையை நீக்க மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள் எனப் பேசியுள்ளார்.

மீ டு மூலம் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சின்மயிக்கு துறை ரீதியாக பல சிக்கல்கள் எழுந்தன. மறைமுகமாக, அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன் அவரைத் தொடர்புகொள்பவர்களின் படங்களுக்கும் அழுத்தம் உருவானதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இசை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து தமிழ்ப் படங்களில் சின்மயி பாடல்களைப் பாடுவதில்லை. குறிப்பாக, 2020-க்கு பிறகு விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் பாடல்களையே சின்மயி பாடியிருக்கிறார்.

அண்மையில், தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலுக்காக பெரிய வரவேற்பைப் பெற்றார். இதுவரை, யூடியூபில் சின்மயி பாடிய அந்த விடியோ 1.4 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

திரும்பத் திரும்ப இப்பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்கள், இப்படியொரு அற்புதமான குரலை நியாயமற்ற அரசியல் காரணங்களுக்காகக் கட்டிப்போட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு அவமானகரமானது எனத் தங்களின் ஆதரவை சின்மயிக்குத் தெரிவிப்பதுடன் அவர் மீதான தடைகளையும் நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சின்மயி, "கடந்த ஒரு வாரத்திற்கு முன் என்னை அழைத்த ஒருவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் உங்கள் மீதான டப்பிங் யூனியன் தடையை நீக்குகிறோம் என்றார். செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அதனால் அதை மறுத்திவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT