அல்லு அர்ஜுன், அட்லி 
செய்திகள்

என்னை நம்புங்கள்... அப்டேட் கொடுத்த அட்லி!

அட்லி திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் அட்லி தன் புதிய திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பான் இந்திய வெற்றிப்படமானதால், பாலிவுட்டில் அட்லிக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால், மும்பையிலேயே குடியேறியுள்ளார்.

தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இப்படம் குறித்த கேள்விக்கு, “அல்லு அர்ஜுனுடனான திரைப்படம் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கண்டடைகிறது. இப்படத்தின் மீது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது எனப் புரிகிறது. என்னை நம்புங்கள், நிச்சயம் மிகச் சிறந்ததை அனுபவிப்பீர்கள்.

தீபிகா படுகோனுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளேன். என்னுடைய அதிர்ஷ்டம் அவர். தாயான பின் அவர் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் வித்தியாசமான தீபிகாவைப் பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

atlee about his movie with allu arjun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமான விபத்தில் அஜித் பவார் பலி!

தங்கம் விலை அதிரடி உயர்வு! ரூ. 400-ஐ தொட்ட வெள்ளி!

அஜித் பவார் சென்ற விமான விபத்து! நிலை என்ன?

தொகுதிப் பங்கீடு! ராகுலுடன் இன்று கனிமொழி சந்திப்பு!

இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!

SCROLL FOR NEXT