FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அந்தத் தெளிவு ஆரம்பத்திலேயே இருந்தது: ப்ரீத்தி அஸ்ரானி

தன் நடிப்பு குறித்து ப்ரீத்தி அஸ்ரானி பேசியுள்ளார்....

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:50 pm IST
ப்ரீத்தி அஸ்ரானி
பகிர்:

நடிகை ப்ரீத்தி அஸ்ரானி தன் நடிப்பு குறித்து பேசியுள்ளார்.

தமிழில் அயோத்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி, தொடர்ந்து கிஸ், 29 ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். நல்ல நடிப்புத் திறன் கொண்ட நடிகை என்பதால் கதையம்சமுள்ள கதாபாத்திரங்களையும் ப்ரீத்தி தேர்வு செய்கிறார். தற்போது, நடிகர் எஸ்ஜே சூர்யாவின் கில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, ”சினிமாவில் நாயகியாக வேண்டும் என்பது என் கனவு. ஆரம்பத்திலேயே நல்ல கதாபாத்திரங்கள் மற்றும் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற தெளிவு இருந்தது. நான் திரைப்படங்களின் எண்ணிக்கையைப் பெரிதாக நினைப்பதில்லை. நினைவில் இருக்கிற மாதிரி நல்ல கதாபாத்திரங்களுக்கே ஆசைப்படுகிறேன்.

Advertisement

Advertisement

நடிகர் எஸ்ஜே சூர்யாவின் கில்லர் திரைப்படமும் அப்படியான ஒரு களம்தான். கில்லர் ஒரு புதிய முயற்சி; நடிப்பத் திறனைத் தாண்டி ஆக்‌ஷனும் செய்ய வேண்டும் என்பதால் ஆடிஷனில் கலந்துகொண்ட பின்பே தேர்வானேன். இதுவரை நான் நடித்த திரைப்படங்களிலிருந்து கில்லரில் வித்தியாசமான ப்ரீத்தியைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Preethi Asrani has spoken about her acting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments