செய்திகள்

அஜித்தை இயக்குவது யார்? பட்டியலில் பிரபல இயக்குநர்கள்!

அஜித்தின் அடுத்த பட இயக்குநர் குறித்து...

DIN

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து ரசிகர்களிடம் ஆர்வம் எழுந்துள்ளது.

விடாமுயற்சியின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் மறுமுறை பார்ப்பதற்கான ஆவலையும் ஏற்படுத்தியதால் இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

அதேநேரம், இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி அஜித் அடுத்த கார் பந்தயத்துக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அஜித்தின் 64-வது படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்விகளும் வட்டமடித்து வருகின்றன. முதலில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் வேறு திட்டத்தில் இருக்கிறாராம்.

இயக்குநர் வெங்கட் பிரபுவும் கதை சொன்னதாகக் கூறுகின்றனர். ஆனால், வெங்கட் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை எடுக்கிறாராம்.

இதற்கிடையே, இயக்குநர் ஷங்கர் தரப்பிலிருந்து அஜித்தை அணுகியதாகவும் ஒரு தகவல் உண்டு. மேலும், இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே அஜித் நடிக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

ஆனால், இவை எவையும் இன்னும் உறுதியாகாத தகவல்களாகவே நீடிப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பே நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT