இளையராஜா 
செய்திகள்

பக்திப் பாடலை வெளியிட்ட இளையராஜா பேரன்!

இளையராஜா பேரன் பக்திப்பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்...

DIN

இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரன் பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் மகனான யத்தீஸ்வர் ராஜாவும் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு தேடும் இவர் முதல் பாடலாக பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து திருவண்ணாமலையில் இன்று வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய யத்தீஸ்வர், “எனக்கும் இசைமேல் ஆர்வம் அதிகம். முதல் பாடல் எப்போதும் கடவுளுக்காக இருக்க வேண்டும் என்பதற்காகப் பக்திப் பாடலை வெளியிட்டேன். இப்பாடலை உருவாக்கும் முன் தாத்தாவிடம் (இளையராஜா) ஆலோசனை கேட்டேன். அவர் எனக்கு சில விஷயங்களைச் சொன்னார்.

பின், அப்பா (கார்த்திக் ராஜா) பாடலின் வரிகளை கவனித்துக்கொண்டார். சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்பதே என் ஆசை. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT