முகப்பு
செய்திகள்

இளையராஜா பயோபிக் கைவிடப்படவில்லை!

இளையராஜா பயோபிக் குறித்து...

Updated On : 9 பிப்ரவரி 2026, 2:55 pm IST
தனுஷ், அருண் மாதேஸ்வரன்
பகிர்:

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதையைத் திரைப்படமாக்கும் திட்டம் கைவிடப்படவில்லையாம்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து, இளையராஜா மற்றும் அருண் மாதேஸ்வரன் அடிக்கடி சந்தித்து படத்தின் உருவாக்கம் குறித்து ஆலோசனை செய்து வந்தனர். இதற்கான, மாதிரி செட் அமைப்பைப் பார்த்த இளையராஜா தன் கருத்துகளையும் தெரிவித்தார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே இப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

Advertisement

Advertisement

மேலும், இப்படத்தின் இயக்குநராக அருண் மாதேஸ்வரனுக்குப் பதில் வேறு இயக்குநர் ஒப்பந்தம் செய்யபட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இளையராஜா பயோபிக் படம் கைவிடப்படவில்லை என்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனே இப்படத்தை இயக்குவார் என்றும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண் தற்போது லோகேஷ் கனகராஜை வைத்து டிசி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து, இளையராஜா திரைப்படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments