செய்திகள்

கண்மணி - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!

கண்மணி - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

DIN

சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.

அந்தத் தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் கொண்ட இவர், பிரபல தொகுப்பாளர் அஷ்வத்தை திருமணம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முன்னதாக, கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் தாங்கள் கருவுற்றிருப்பதை அறிவித்து இருந்தனர். சிங்கப்பூர் சென்று இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினர்.

இந்த நிலையில், கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினருக்கு நேற்று(ஜூன் 9) ஆண் குழந்தை பிறந்தது. இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் பகிர்ந்துள்ளனர்.

அவர்களுடைய பதிவில், “நாங்கள் ஒரு காதல் கதை எழுதினோம். ஆனால் எங்கள் வாழ்க்கை ஆச்சர்யத்துடன் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்துள்ளது. எங்கள் பயணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு சின்ன திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: 3.15 மணிநேர கால அளவு கொண்ட குபேரா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமி தில்லி பயணத்துக்குப் பின் நல்லது நடக்கும்: நயினாா் நாகேந்திரன்

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையானுக்கு மின் வாகனம் நன்கொடை

திருமலையில் மோரிஷஸ் பிரதமா் வழிபாடு

வேட்டைக்காரன் இனமக்களை மீண்டும் பழங்குடியினா் பட்டியலில் இணைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT