இயக்குநர் ராம் குமாருடன் நடிகர் விஷ்ணு விஷால்.  படம்: எக்ஸ் / விஷ்ணு விஷால்.
செய்திகள்

விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணி: படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த படத்தின் அப்டேட் குறித்து...

DIN

நடிகர் விஷ்ணு விஷால் தான் 150 நாள்களாக நடித்துவந்த ’இரண்டு உலகம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

தற்போது, 3-ஆவதாக இந்தக் கூட்டணி ‘இரண்டு உலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் இணைந்துள்ளது.

இந்தப் படத்தை சதய்ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது விஷ்ணு விஷாலின் 21ஆவது படமாக உருவாகிவருகிறது.

கடைசிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ராட்சசன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், 150 நாள்களாக நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும், அதில் ராம்குமார் இந்த முறையும் புதியதாக தனித்துவமாக ஆர்வத்தை தூண்டும்படி படத்தை சமைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் உதவியால் ரன்கள் குவித்தேன்: ஷுப்மன் கில்

கரூர் பலி: முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? - ராமதாஸ்

ஸுபின் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! ஸ்கூபா டைவிங் போது இறக்கவில்லை!!

குணசீலத்தில் தேரோட்டம்!

விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

SCROLL FOR NEXT