திட்டமிட்ட தேதிக்கு முன்பே ஓடிடிக்கு வரும் தக் லைஃப்?
தக் லைஃப் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ஓடிடியில் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த வியாழக்கிழமையன்று (ஜுன். 5) வெளியானது.
படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் வணிக ரீதியாக இப்படம் கடுமையானத் தடுமாற்றத்தை அடைந்தது.
Advertisement
இதுவரை இப்படம் இந்தியளவில் ரூ. 40 கோடிதான் வசூலித்திருக்கிறதாம். இத்தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திரையரங்க வெளியீட்டுத் தேதியைத் தொடர்ந்து 8 வாரங்கள் கழித்தே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாகும் என கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.
ஆனால், படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியடைந்ததால் விரைவிலேயே ஓடிடிக்குக் கொண்டு வர நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாம். அதற்கான அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ‘மன்னிப்பு’ மனம் வருந்திக் கேட்பதா? வற்புறுத்திப் பெறுவதா?