மெஸ்ஸி, சௌபின் சாகிர்.  கோப்புப் படங்கள்.
செய்திகள்

மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்ஸி..! சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

மலையாள நடிகர் சௌபின் சாகிர் பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு குறித்து...

DIN

மலையாள நடிகர் சௌபின் சஹார் மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்ஸியை பகிர்ந்து ”கனவு நனவானது” எனக் கூறியுள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (37)க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, கேரளத்தில் அதிகமாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை பகிர்ந்திருந்தார்.

மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக பார்சிலோனா அணிக்காக விளையாடி இருந்தார். அந்த பார்சிலோனா ஜெர்ஸியில்தான் சௌபினுக்கு கையெழுத்து கிடைத்துள்ளது.

நடப்பு உலக சாம்பியனான ஆர்ஜென்டீனா தற்போது, 2026 உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றுள்ளது. மெஸ்ஸி தற்போது உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

சௌபின் சாஹிர் ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT