பொன்னி சீரியலைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
இத்தொடரில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அஸ்வினி நடிக்கிறார்.
மேலும் இத்தொடரில் காயத்ரி ஜெயராம், அஜய் ரத்னம், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இத்தொடர் கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் 200 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட கதையின் நாயகி(அஸ்வினி), எளிமையான குடும்பத்துக்கு பணிப்பெண்ணாக சென்று நாயகனை(யுவன்) காதலிக்கிறார், இதுவே இத்தொடரின் மையக்கரு.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் தங்கமகள் தொடர் நிறைவடையவுள்ளது இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஓடிடியில் ஆலப்புழா ஜிம்கானா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.