லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றி ரகசியம் பகிர்ந்த நாகார்ஜுனா!
நடிகர் நாகார்ஜுனா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசியதாவது...
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றிக்குக் காரணம் அவரது தனித்துவமான கதாபாத்திரங்கள்தான் எனக் கூறியுள்ளார்.
நாகார்ஜுனா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரஜினியுடன் ஆமிர் கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்தியராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
Advertisement
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கூலி’ வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதன் புரமோஷன் பணிகள் தற்போதே சூடிபிடித்துள்ளன. நாகார்ஜுனா யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப் பாருங்கள் அனைத்திலும் சிறப்பான கதாபாத்திரங்கள். விக்ரம் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி எல்லாமே நன்றாக இருந்தன.
விக்ரம் படத்தில் வரும் டீனா கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. இந்தமாதிரி சுவாரசியமான கதாபாத்திரங்கள்தான் அவரது வெற்றியின் ரகசியமாக இருக்கிறது.
கூலி படத்தில் ரஜினியைத் தவிர்த்து பார்த்தாலுமே உபேந்திரா, ஆமிர் கான், என்னுடைய கதாபாத்திரங்கள் தனியாக நிற்கும் அளவுக்கு இருக்கின்றன என்றார்.