ஓடிடியில் ஏஸ்!
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் ஓடிடியில்...
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ஆறுமுகக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ஏஸ். முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதுபோல் எடுக்கப்பட்ட இப்படம் யோகி பாபுவின் நகைச்சுவை மற்றும் கதைக்காக ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
ஆனால், படத்திற்கு சரியான புரமோஷன் இல்லாததால் வணிக ரீதியான வெற்றியைத் தவறவிட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகை ருக்மணி வசந்த் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இசையமைப்பாளர் அனிருத் திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!