தனுஷ், நாகர்ஜுனா 
செய்திகள்

குபேராவின் கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்: நாகர்ஜுனா

குபேரா திரைப்படம் குறித்து நடிகர் நாகர்ஜுனா பேசியுள்ளார்..,

DIN

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா குறித்து நாகர்ஜுனா பேசியுள்ளார்.

நடிகர் தனுஷும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ரூ. 120 கோடி பட்ஜெட்டில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட நாகர்ஜுனா, “குபேரா கதை முக்கியமான விஷயங்களைப் பதிவு செய்கிறது. பெரும் பணக்காரர், மிடில் கிளாஸ், ஏழை என இந்த நாட்டின் அமைப்பை ஊழல் பின்னணியில் கேள்வி கேட்கிறது. இயக்குநர் சேகர் கமூலா இப்படத்திற்காக நிறைய தகவல்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார். படத்தின் கதையில் சில விஷயங்கள் உண்மையிலேயே என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

இளைஞா் கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT