ஸ்டோலன் படக்குழுவினருடன் கமல் ஹாசன் 
செய்திகள்

ஸ்டோலன் படக்குழுவைப் பாராட்டிய கமல் ஹாசன்!

ஸ்டோலன் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்...

DIN

ஹிந்தியில் உருவாகி கவனம் பெற்ற ஸ்டோலன் படத்தை நடிகர் கமல் ஹாசன் பாராட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில் இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்டோலன் (stolen).

கதை நாயகனாக நடிகர் அபிஷேக் பானர்ஜி வடமாநில ரயில் நிலையம் ஒன்றில் தன் சகோதரருடன் இருக்கும்போது அங்கு குழந்தை ஒன்று காணாமல் போகிறது. இவர்கள்தான் சாட்சி என்பதால் குழந்தையைத் தேடி நாயகனும் குழந்தையின் தாயும் மேற்கொள்ளும் தேடுதலாக இப்படம் உருவாகியிருந்தது.

1.30 மணி நேரம் கொண்ட இப்படம் 2023 ஆம் ஆண்டே தயாரானது. ஆனால், திரையரங்குகளில் வெளியிடாமல் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அமேசான் பிரைம் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையைப் பெற்று கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியிட்டனர்.

ஓடிடிக்கு வந்தபின் நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வெறும் குழந்தைக் கடத்தல் படமாக இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் சுரண்டல்களையும் படம் பேசியதால் விமர்சகர்களிடம் நேர்மறையான கருத்துகளைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல் ஹாசன் ஸ்டோலன் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT