கார்த்திக் சுப்புராஜ் 
செய்திகள்

ஒரு குழு சினிமாவைத் திட்டமிட்டு அழிக்கிறது: கார்த்திக் சுப்புராஜ்

சிலர் சினிமாவில் வேண்டுமென்றே வெறுப்பைப் பரப்புவதாகக் கார்த்திக் சுப்புராஜ் குற்றச்சாட்டு...

DIN

சிலர் சினிமாவைத் திட்டமிட்டு அழித்து வருவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால், வணிக ரீதியாக அப்படம் வெற்றியையும் பதிவு செய்தது.

படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் கதையாக ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களின் கலவைபோல் இருந்ததால் கார்த்திக் சுப்புராஜ் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “நான் விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆக்கப்பூர்வமான பார்வையாக இருந்தால் மட்டுமே கவனம் செலுத்துவேன். ஆனால், இப்போதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்களைச் செய்கின்றனர்.

அதிலும், எனக்குத் தெரிந்து ஒரு குழு இருக்கிறது. அவர்கள் சினிமாவையே அழிக்க முயற்சி செய்கின்றனர். இதற்கென்ற அந்த அலுவலகம் செயல்படுகிறது. மது குடிப்பதைத் தடுக்கலாம். ஆனால், சினிமா பார்ப்பதைத் தடுக்க முடியுமா? நல்ல திரைப்படங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT