செய்திகள்

நடிகர் சங்க கட்டடத்தின் நிலை என்ன? விடியோ வெளியீடு!

நடிகர் சங்க கட்டடத்தின் அமைப்பு விடியோ வெளியாகியுள்ளது...

DIN

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் முடிவும் தருவாயில் இருப்பதாக விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சங்கங்கத்திற்கான கட்டடம் கட்டும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், துவங்கிய சில மாதங்களிலேயே வங்கிக் கடன் பெறுவது தொடர்பான சில சிக்கல்கள் எழுந்ததால் கட்டட உருவாக்கத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன.

சில மாதங்களுக்கு முன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய கட்டடத்தில் நடிகர்கள் சங்க அலுவலகங்கள், திரையரங்கம், நடிப்பு பயிற்சி அரங்கங்கள், உடற்பயிற்சி கூடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட திறப்பு விழாவை வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக விஷால் தெரிவித்திருந்த நிலையில், கட்டடத்தின் தற்போதைய நிலை மற்றும் வசதிகள் குறித்த புதிய விடியோவை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடியோவில் கட்டட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

முன்னாள் ஊராட்சித் தலைவா் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT