செய்திகள்

அதிக தொகைக்கு விற்கப்பட்ட கூலி வெளிநாட்டு உரிமம்!

கூலி வெளிநாட்டு உரிமம் குறித்து...

DIN

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்த் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது. இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரைக்கு வருவதால் அதற்கான வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இப்படத்தின் முதல் பாடலை இந்த வார இறுதிக்குள் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ. 81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். தகவல் உண்மையென்றால், இதுவே அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் சினிமாவாகும். மேலும், அண்டை மாநிலங்களின் விநியோகிஸ்தர்களுக்கான உரிமமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கூலி திரைப்படம் பெரிய வணிக வெற்றியை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!

ஹாப்பி ராஜ் புரோமோ!

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

SCROLL FOR NEXT