முகப்பு
செய்திகள்

பீனிக்ஸ் - வீழான்: கானா பாடல் வெளியீடு!

நடிகர் சூர்யா விஜய்சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் - வீழான் படத்தின் பாடல் குறித்து...

Updated On : 21 ஜூன் 2025, 3:26 pm IST
பீனிக்ஸ் - வீழான் பாடலின் போஸ்டர். - படம்: எக்ஸ் / சாம் சிஎஸ்.
பகிர்:

நடிகர் சூர்யா விஜய்சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் - வீழான் படத்திலிருந்து கானா பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Advertisement

Advertisement

அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில்  ‘பீனிக்ஸ் - வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்திலிருந்து சூர்யா சேதுபதி என்கிற பெயரில் திரைத்துறைக்கு வருகிறார். இப்படத்தின் முதல் பாடலான ’யாராண்ட’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

கடந்த நவ.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னைகளால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்தப் படத்திலிருந்து குத்துப் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஜூலை 4ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.