நடிகர் விஜய் கோப்புப் படம்
செய்திகள்

ஜன நாயகன் கடைசி படமா? விஜய்யின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் விஜய் தனது கடைசி படம் குறித்து பேசியதாவது...

DIN

நடிகர் விஜய் தனது கடைசி படம் இதுதானா? என்பது குறித்து நடிகையிடம் பதிலளித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சியைத் தொடங்கியதால் இனிமேல் விஜய் நடிக்கமாட்டார் என தகவல்கள் வெளியாகின. அரசியல் மேடையில் இது குறித்து, “எனது சினிமா பயணத்தின் உச்சத்தை விட்டு உங்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன்” எனக் கூறினார்.

இந்நிலையில், இது கடைசி படமா என்ற கேள்விக்கு, “தெரியவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரிய வரும்” என நடிகர் விஜய் பதிலளித்ததாக மமிதா பைஜூ கூறியுள்ளார்.

விஜய் கூறிய பதிலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜன நாயகன் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். இதில் பூஜா ஹெக்டேவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்தப் படத்தில் பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி நடித்துள்ளார்கள்.

மமிதா பைஜூ பிறந்தநாளில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜன நாயகன் படம் குறித்து பேசினார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் அனைவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அப்போது நடிகர் விஜய் உள்பட பலரும் உணர்ச்சிபூர்வமாக இருந்ததகாவும் நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை எரிவாயு மூலம் 120 அரசுப் பேருந்துகள் இயக்க ஒப்பந்தம்

உலகக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்

எஸ்.ஐ.ஆா். பணி: வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் உதவி மையங்கள்

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 140 அடியாக உயா்வு

திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT