சோஃபியா படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

அண்ணா தொடரில் இணையும் சின்ன மருமகள் நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரில் சின்ன திரை நடிகை சோஃபியா இணையவுள்ளார்.

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரில் சின்ன திரை நடிகை சோஃபியா இணையவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் சோஃபியா நடித்து வரும் நிலையில், புதிய தொடரிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2023 மே மாதம் முதல் அண்ணா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் - வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில், நடிகை நித்யா ராம், பூவிலங்கு மோகன், ரோசரி, சுபிக்‌ஷா, பிரீதா, ஹேமா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சோஃபியா

தற்போது சின்ன மருமகள் தொடரில் நடித்து வந்த நடிகையும் விளம்பர மாடலுமான சோஃபியா, அண்ணா தொடரில் நடிக்கவுள்ளார். இவரின் வருகையால் தொடரில் புதிய எதிர்பார்ப்புகளும், கணிக்க முடியாத திருப்பங்களும் ஏற்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விளம்பர மாடலாக இருந்த சோஃபியா, நடிப்புத் துறையில் மெல்ல மெல்ல கால் பதித்து வருவதால், அண்ணா தொடர் அவரின் நடிப்புக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | உணவகத்தில் ரசிகைகளை சந்தித்த சீரியல் நடிகை மதுமிதா!

இதையும் படிக்க | சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி! வெள்ளநீர் இனி விரைந்து செல்லும்!

சிறுமி பாலியல் வன்கொடுமை... பிரபல மலையாள நடிகை கைது!

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

SCROLL FOR NEXT