முகப்பு
செய்திகள்

டிஆர், அனிருத் குரலில் வெளியான கூலி பட பாடல்!

‘கூலி’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 25 ஜூன், 2025 at 6:56 PM
பகிர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’-ஐ பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் ரவிச்சந்திரனின் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

இதனிடையே பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், ‘கூலி’ படத்தின் முதல் பாடலான ’சிக்கிட்டூ’ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை அறிவு எழுத, டி.ஆர். ராஜேந்திரன், அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.

’சிக்கிட்டூ’ பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட புதிய பட போஸ்டர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.