முதல் பாடல், வெளியீட்டு அப்டேட்டை பகிர்ந்த ஹாய் படக்குழு!
நடிகர் கவின் நடித்துள்ள ஹாய் படத்தின் முதல் பாடல் குறித்து...
நடிகர்கள் கவின், நயன்தாரா நடிப்பில் உருவான ஹாய் திரைப்படத்தின் முதல் பாடலின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழிய’ எனும் பாடல் வரும் ஏப்.21ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
Advertisement
Advertisement
கடைசியாக மாஸ்க் படத்தில் கவின் நாயகனாக நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு, வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த படக்குழு, இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகுமெனவும் தெரிவித்துள்ளது.
Hi Movie First single 'Kannakuzhiya' releasing on this April.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.