செய்திகள்

தி ஹண்ட் - ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடரின் தமிழ் டிரைலர்!

தி ஹண்ட் தமிழ் டிரைலர் வெளியானது...

DIN

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹண்ட் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இந்த சதிச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை இந்திய உளவுத்துறை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை மையமாகக் கொண்டு தி ஹண்ட் (the hunt) என்கிற பெயரில் இணையத் தொடர் உருவாகியுள்ளது.

இயக்குநர் நாகேஷ் குகுநூர் இயக்கத்தில் அமித் சியால், சஹில் வைத், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் தயாரான இத்தொடர் வருகிற ஜூலை 4 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடரின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ராஜீவ் காந்தி படுகொலைக் காட்சியிலிருந்து கதை விரிவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

the hunt web series tamil trailer out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

வீராபுரத்தில் பேருந்து நிறுத்தம்: ஆட்சியா் உறுதி

சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

SCROLL FOR NEXT