சஞ்சய் காந்தி, சூர்யா 
செய்திகள்

சஞ்சய் காந்தி பயோபிக் படத்தில் நடிக்கத் திட்டமிட்ட சூர்யா... ஆனால்!

நடிகர் சூர்யாவின் புதிய படம் குறித்து...

DIN

நடிகர் சூர்யா மறைந்த அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தற்போது சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தன் 46-வது படத்தில் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வெங்கட் அட்லூரி, “மறைந்த காங்கிரஸ் அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சூர்யா - 46 திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தோம். ஆனால், சஞ்சய் காந்தியின் பயோபிக் உரிமத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

சூர்யாவும் சூரரைப் போற்று, ஜெய்பீம் என இரு உண்மைக் கதைகளில் நடித்துவிட்டார். அதனால், வேறு ஒரு கதையையே தற்போது எடுத்து வருகிறோம். இது, குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, சஞ்சய் காந்தியின் பயோபிக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

suriya plans to act sanjay gandhi biopic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT