நயன்தாரா  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம்: நயன்தாரா!

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

DIN

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான் என்றும், ஆனால் அவை வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து பிரிக்கக் கூடும் எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளதாவது,

''என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது.

வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் ரசிகர்களான நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார்' என்று அன்புடன் அழைத்து வாழ்த்துகிறீர்கள். உங்கள் ஆதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால், இனிமேல் என்னை `நயன்தாரா' என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது; ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் அது மட்டுமே குறிக்கிறது.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, அடுத்தடுத்து விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து புகழ் பெற்றுள்ளார்.

தொடர்ந்து உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாரா, பெண் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அடுத்தடுத்து நடித்துவந்தபோது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

இதையும் படிக்க | பேட் கேர்ள் டீசரை நீக்கக் கோரிய வழக்கு: கூகுள் பதிலளிக்க உத்தரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்: நீதிபதி சந்துரு

தளி தோட்டக்கலை ஆராய்ச்சி, பயிற்சி மையத்தில் பட்டயப் படிப்பு

ராயபுரத்தில் ரூ.12.93 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சேலத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு: தந்தை படுகாயம்

பரையன்தாங்கல் ஊராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள்

SCROLL FOR NEXT