நடிகை தமன்னா - விஜய் வர்மா  
செய்திகள்

காதலரைப் பிரிந்த நடிகை தமன்னா !

நடிகை தமன்னா - விஜய் வர்மா காதல் முறிவு குறித்து...

DIN

நடிகை தமன்னா அவரது காதலர் விஜய் வர்மாவைப் பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். தமன்னா தற்போது தெலுங்கில் ‘ஓடிலா 2’ என்ற படத்தில் நடிக்கிறார். இதன் டீசர் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது.

இவரும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் கடந்த 2023 முதல் காதலித்து வந்தனர். இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் - 2 இணையத் தொடரில் இணைந்து நடித்தபோது ஒன்றாகப் பழகி வந்தனர். பின்னர் தாங்கள் காதலிப்பதை இருவருமே பொதுவில் அறிவித்தனர்.

இதுகுறித்து முன்னர் தமன்னா அளித்த பேட்டியில், ”விஜய் வர்மாதான் நான் எதிர்பார்த்த ஆள். அவரிடம் என்னால் மிகவும் இயல்பாக பழக முடிந்தது. நானே உருவாக்கிய உலகத்தில் எனக்காக இருப்பவர் அவர்தான். நான் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ளும் நபராக விஜய் இருக்கிறார். அவருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இரு ஆண்டுகளாக காதலித்து வந்த தமன்னா - விஜய் வர்மா ஜோடி தற்போது பிரிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் அதனைப் பொதுவில் அறிவிக்க விரும்பவில்லை என்றும் நண்பர்களாகத் தொடர முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காதல் முறிவை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னாவுடன் இணைந்து பதிவிட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT