வீர தீர சூரன் பட போஸ்டர் 
செய்திகள்

ஆத்தி அடி ஆத்தி... வீர தீர சூரன் 2-வது பாடல் வெளியீடு!

வீர தீர சூரன் படத்தின் 2-வது பாடல் வெளியீடு.

DIN

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான் வெற்றிக்குப் பின்னர் வெளியாகும் விக்ரமின் படம் என்பதால் வீர தீர சூரன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடலான ’கல்லூரும் காத்து’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இரண்டாவது பாடலான, ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், சாதிகா பாடியுள்ளனர்.

இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT