விஜய், பாபி தியோல்.  
செய்திகள்

விஜய் மிகவும் தன்னடக்கமானவர்..! பாபி தியோல் பேட்டி!

ஜன நாயகன் படத்தின் வில்லன் பாபி தியோல் விஜய் குறித்து பேசியவை...

DIN

ஜன நாயகன் படத்தில் நடித்துவரும் பாபி தியோல் விஜய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

விஜய் சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார். தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அனிமல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் பிரபலமாகியுள்ள பாபி தியோல் தமிழில் கங்குவா படத்தில் நடித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற பாபி தியோல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விஜய் ஸ்வீட்ஹார்ட்டாக இருக்கிறார். மிகவும் எளிமையான, தன்னடக்கமான மனிதர்.

புதிய கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சவாலான ஒன்றைச் செய்வது பிடிக்கும்.

கடவுள் என்மீது மிகவும் இரக்கம் காட்டுகிறார். கடைசி 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்காக நிற்கிறார்கள். எனது அப்பாவினால் எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறதென நினைக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

நான் எந்த விருது வென்றாலும் அது ரசிகர்களுக்கானவை. ஓடிடி ஐபிஎல் போன்றது. யார் வேண்டுமானாலும் எந்த அணியில் வேண்டுமானாலும் விளையாடலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா மீண்டும் சாம்பியன்!

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவு!

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT