முகப்பு
செய்திகள்

ஜன நாயகன் படத்தில் பிரபல இயக்குநர்கள்?

ஜன நாயகன் படம் குறித்து...

செய்திகள்

ஜன நாயகன் படத்தில் பிரபல இயக்குநர்கள்?

ஜன நாயகன் படம் குறித்து...

Updated On : 11 மார்ச், 2025 at 11:53 AM
பகிர்:

நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தில் பிரபல இயக்குநர்கள் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது.

மேலும், தமிழ் புத்தாண்டான ஏப். 14 ஆம் தேதி அன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இது விஜய்யின் கடைசி படமென்பதால் அவருக்கு நெருக்கமான இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் விஜய்யுடன் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →