செய்திகள்

ரசிகரை அடித்த பிரபல நடிகை!

ரசிகரை அறைந்த நடிகை...

DIN

பிரபல நடிகையொருவர் ரசிகர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராகிணி திவேதி. அறிமுகமான ஆண்டில் சில படங்களில் தொடர்ச்சியாக நடித்து கவனம் ஈர்த்தவர் தமிழில் அறியான், நிமிர்ந்து நில், கிக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தென்னிந்திய மொழிகளில் அறியப்பட்ட நாயகியாகவே இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பெங்களூருவிலுள்ள ராகிணியின் இல்லத்தை சோதனை செய்தபோது அவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிலிருந்ததும் போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராகிணி 140 நாள்கள் வரை சிறையிலிருந்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகிணி திவேதியிடம் புகைப்படம் எடுக்கவும் ஆட்டோகிராஃப் வாங்கவும் ரசிகர்கள் கூட்டமாக அவரைச் சூழ்ந்தனர்.

ராகிணி திவேதி

அப்போது, எதிர்பாராத விதமாக ரசிகர் ஒருவர் ராகிணியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால், கோபமடைந்த ராகிணி அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT